தலைமைத்துவம்
ධම්මික පෙරේරා මහතා
නිර්මාතෘ සහ සභාපති
தம்மிக்க அன்ட் பிரிஸ்சில்லா அறக்கட்டளையின் இணை நிறுவனர்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு கல்வி மற்றும் சுகாதாரத் திட்டங்களை நிறுவுவதற்கும் ஆரம்பிப்பதற்கும் உறுதியாக உள்ளனர். அறக்கட்டளையின் தெலைநோக்காக “உலகத்தரத்திலான டிஜிட்டல் கற்றல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பிற்கு சமமான அணுகலுக்கு பாடுபடுதலுடன் வறுமையற்ற ஒரு தரமான வாழ்க்கை முறையைக் கொண்ட நாட்டை உருவாக்குதல்” உள்ளதுடன், அறக்கட்டளையின் செயற்பாடாக “இலவச இணைய கல்வி, சிறந்த வகுப்பாசிரியர்கள் மற்றும் கல்வியின் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் ஊடாக சிறந்த அனுபவங்கள் உள்ளடங்கியதாக கற்றல் மற்றும் கற்பித்தலை மாற்றல்” என்பன உள்ளன. குறியாக்கல் முறை பற்றிய தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் திரு. தம்பிக்க பெரேரா அவர்களும் திருமதி. பிரிஸ்சில்லா பெரேரா அவர்களும் டிபி எடியூகேஷன் குறியாக்கல் முறைப் பாடசாலையை ஆரம்பித்துள்ளனர். பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனையும், தர்க்க ரீதியிலான சிந்தனைத் திறனையும் சிறுவர்கள் மத்தியில் குறியாக்கல் முறை வளர்க்கின்றது. அத்துடன் குறியாக்கல் முறை கணிதத் திறனையும், பாடசாலை மற்றும் கல்வி நிகழ்ச்சிகளில் ஒத்துழைத்து செயற்படும் தன்னம்பிக்கையையும் வளர்க்கின்றது.